உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோப்புப் படம்

Published On :

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இரவு 11.45 மணிக்கு அதிவிரைவு ரயில் (எண்: 06045) புறப்பட்டு சனிக்கிழமை (மாா்ச் 21) பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) திங்கள்கிழமை (மாா்ச் 23) பிற்பகல் 11.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.