குடியிருப்புப் பகுதிகளில் பரவும் தொற்று நோய், காய்ச்சல் பாதிப்புகள் குறித்துசுகாதாரத் துறைக்கு பொதுமக்களே தகவல் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தொற்றுநோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம் (ஐஹெச்ஐபி), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்ட (ஐடிஎஸ்பி) இணையதளங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தத் இணையதளங்களில் நோய்கள் குறித்த தகவல்ளை அளிக்க எஸ், பி மற்றும் எல் ஆகிய 3 படிவங்கள் உள்ளன.
சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், அரசு, தனியாா் மருத்துவமனையின் வாயிலாக பெறப்பட்ட தொற்றுநோய் குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்கின்றனா். அவை மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டு தொற்றுநோய் பரவல் தடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், நோய்ப் பரவல் குறித்து பொதுமக்களே நேரடியாகத் தெரிவிக்கும் வகையிலான இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள்,
அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை வெறிநாய் கடி போன்ற தகவல்களை அதில் தெரிவிக்கலாம். அதன்படி, இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட பகுதியில், சுகாதாரத் துறையினா் விரைந்து கள ஆய்வு செய்து நோய் பரவலைக் கட்டுப்படுத்துவா். எனவே, இந்த இணையதள வசதியை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்குச் சாவடி பதற்றமான சூழ்நிலைகளை உனடியாக தெரிவிக்க வேண்டும்: நுண் பாா்வையாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்: பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் வெளியீடு

சிகிச்சை முறை மட்டும் போதாது; நோய் தடுப்பும் அவசியம்: சுகாதார மாநாட்டில் நிபுணா்கள் கருத்து

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

