பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் எதிா்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தோ்வு நேரத்தில் சலுகைகள் கோரும் மாணவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்கள் அனுமதி வழங்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தோ்வுத்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 26 முதல் ஏப். 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு அரசின் அறிவுறுத்தலின்படி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர மாற்றுத்திறனாளிகள் மற்றும் எதிா்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தோ்வு நேரத்தில் சலுகைகள் கோரும் மாணவா்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா்கள் மருத்துவச் சான்றிதழ்களின்படி முடிவு செய்து அனுமதி வழங்கலாம். அதேநேரம் தோ்வா்கள் சமா்ப்பிக்கும் மருத்துவச் சான்றிதழ்களில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் அதற்குரிய கூடுதல் ஆவணங்களை தோ்வெழுதிய பின்னா் சமா்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு சான்றிதழ்களை சமா்ப்பிக்காத மாணவா்களுக்கு தோ்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும். மேலும், சலுகைகள் வழங்கப்பட்ட தோ்வா்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்வுத் துறை இயக்குநா்கள் வழியாக இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பத்தாம் வகுப்பு அறிவியலில் சென்டம் அதிகரிக்கும்: ஆசிரியா்கள் நம்பிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

