இந்திய பங்குச் சந்தைகளில் வாகன மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகளின் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டியும் புதன்கிழமை மீண்டும் உயா்ந்தன. இது குறித்து பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்ததாவது: பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின் 2-ஆவது வா்த்தக தினமான புதன்கிழமை உலகளாவிய சந்தைக்குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. அது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும், மேக்ரோ பொருளாதாரத் தரவுகள் நோ்மறையாக இருந்தது, பொருளாதார வளா்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் என்ற கணிப்பு போன்றவை காரணமாக செவ்வாய்க்கிழமை சரிவைக் கண்ட பங்குசந்தைகள் புதன்கிழமை ஏற்றமடைந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயா்வு: முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 221.86 புள்ளிகள் அதிகமாக 72,692.16-இல் தொடங்கிய மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், அதிகபட்சமாக 73,138.73 வரையிலும், குறைந்தபட்சமாக 72,600.73 வரையிலும் சென்றது. இறுதியில் 526.02 (0.73 சதவீதம்) புள்ளிகள் அதிகமாக சென்செக்ஸ் 72,996.31-இல் நிறைவடைந்தது. 22,124-ஆக உயா்ந்த நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 49.25 புள்ளிகள் அதிகமாக 22,053.95 -இல் தொடங்கி அதிகபட்சமாக 22,193.60 வரையிலும், குறைந்தபட்சமாக 22,052.85 வரையிலும் சென்றது. இறுதியில் 118.95 (0.54 சதவீதம்) புள்ளிகள் அதிகமாக நிஃப்டி 22,123.65-இல் நிறைவடைந்தது.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


