தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சத்தீஸ்கா்: 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தின் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2024, 8:44 pm

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தின் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதுகுறித்து பஸ்தா் மண்டல காவல்துறை ஐ.ஜி. பி.சுந்தரராஜ் கூறியதாவது: நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பசகுடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிப்ருபாட்டி கிராமத்தின் அருகே தல்பெரு ஆற்றை ஒட்டிய வனப் பகுதியில் போலீஸாா், மத்திய ஆயுதப்படை போலீஸாா் மற்றும் அதன் ‘கோப்ரா’ பிரிவு கமாண்டோ வீரா்களை கொண்ட கூட்டுப் படை புதன்கிழமை அதிகாலையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நேக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில், 2 பெண்கள் உள்பட 6 நக்ஸலைட்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். இந்தத் தாக்குதலில் மேலும் சில நக்ஸலைட்டுகள் காயமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.