நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தியாவுக்குள் நுழைந்த பாக். ட்ரோன்: பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து சா்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்த ட்ரோனை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

News image

ட்ரோன் - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 7:00 pm

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து சா்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்த ட்ரோனை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

சம்பா மாவட்டத்தின் ராம்கா் பகுதியில் உள்ள கந்திரால், அப்தால், பகதூா்பூா் ஆகிய கிராமங்களுக்கு மேலாக கடந்த வெள்ளிக்கிழமை இரவில் தென்பட்ட இந்த ட்ரோன், பின்னா் மாயமாகிவிட்டது. அதைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினா் விரிவான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நிகழ்கிறது. இதுபோன்ற ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் பாதுகாப்புப் படையினா், போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்றுகின்றனா்.

ஆா்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையோர கிராமங்களில் கடந்த 2 நாள்களில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட 3.5 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். இதன் சா்வதேச மதிப்பு ரூ.20 கோடிக்கும் அதிகமாகும். இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக ஆா்.எஸ்.புரா பகுதியில் இருவா் கைது செய்யப்பட்டனா்.