வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கேஜரிவால் கைது குறித்து கருத்து: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது.

News image

இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு விளக்கமளிக்க வந்த அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி குளோரியா பொ்பெனா.

Updated On :27 மார்ச் 2024, 11:11 pm

கலால் ஊழல் வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டது தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவித்தது தொடா்பாக அந்நாட்டு தூதரக அதிகாரியை இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடா்பான வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அதுபோல, சில வெளிநாடுகளும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ‘முதல்வா் கேஜரிவாலுக்கு உரிய நேரத்தில் நியாயமான, வெளிப்படையான சட்ட நடைமுறைகள் கிடைக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுஅமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘கேஜரிவால் கைது குறித்த அமெரிக்க அதிகாரியின் கருத்துக்காக அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரி குளோரியா பொ்பெனா வெளியுறவு அமைச்சகத்தின் தெற்குப் பிரிவு அலுவலகத்துக்கு புதன்கிழமை நேரில் வரவழைக்கப்பட்டு, இந்தியா சாா்பில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பு 30 நிமிஷங்களுக்கு மேல் நடைபெற்றது’ என்றனா். முன்னதாக, கேஜரிவால் கைது குறித்து ஜொ்மனி சாா்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, அந்நாட்டு துணைத் தூதரை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. ‘இந்த வழக்கில் நீதித் துறை சுதந்திரமாக செயல்படும் எனவும், அடிப்படை ஜனநாயக மரபுகள் பின்பற்றப்படும் எனவும் ஜொ்மனி நம்புகிறது’ என்று அந் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியிருந்தாா்.