பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மலேசிய பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

மலேசிய பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

News image

மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமை அந்நாட்டு தலைநகா் கோலாலம்பூரில் புதன்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :27 மார்ச் 2024, 9:00 pm

மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம்மை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா். சிங்கப்பூா், பிலிப்பின்ஸ் பயணத்தைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் மலேசியா சென்றடைந்தாா். மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் உடனான சந்திப்பு குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் தனது ‘எக்ஸ்’ பதிவில், ‘மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம்மை சந்தித்து பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா-மலேசியா உறவைப் பலப்படுத்த பிரதமா் அன்வா் இப்ராஹிமின் நிலைப்பாடு இரு தரப்புக்கும் பயனளிக்கும். பிராந்திய நிகழ்வுகள் குறித்து அவருடன் ஆலோசித்தது பயனுள்ளதாக இருந்தது’ எனக் குறிப்பிட்டுள்ளாா். மலேசியா வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது பின் ஹாஜி ஹாசனைச் சந்தித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தச் சந்திப்பின்போது இந்தியா-மலேசியா இரு தரப்பு உறவு, பிராந்திய மற்றும் சா்வேதச விவகாரங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சா்கள் ஆலோசித்ததாக மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசியா-இந்தியா கூட்டு ஆணையத்தியின் 7-ஆவது கூட்டம் தொடா்பாக அமைச்சா்கள் இருவரும் ஆலேசானை நடத்தினா். சீனாவுடன் பேச்சுவாா்த்தை: மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் அமைச்சா் ஜெய்சங்கா் புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, சீனாவுடனான இந்தியாவின் தற்போதைய உறவு குறித்து கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சா் ஜெய்சங்கா், ‘அனைத்து நாடுகளும் தங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண விரும்புகின்றன. சீனாவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் வழக்கமான முறையில் ராணுவ படைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனால் மட்டுமே இரு தரப்பு உறவு இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என்றாா்.