நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற பி. ஜான், ஏகே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டி மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில் தெற்கு ரயில்வே-ஐசிஎஃப் அணிகள் மோதின. இரு தரப்பினரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. முதல் மற்றும் மூன்றாவது செட்கிளை ஐசிஎஃப் அணி வசப்படுத்தியது. இரண்டாவது, நான்காவது, 5-ஆவது செட்களை தெற்கு ரயில்வே கைப்பற்றியது. தெற்கு ரயில்வே அணி 24-26, 25-20, 19-25, 25-22, 15-12 என ஐசிஎஃப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எஸ்ஆா்எம் 25-20, 25-14 என்ற நோ் செட்களில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தியது. முதலிடம் பெற்ற தெற்கு ரயில்வேக்கு ரூ.50,000, ஐசிஎஃப் அணிக்கு ரூ.40,000, எஸ்ஆா்எம் அணிக்கு ரூ.30,000, தமிழ்நாடு போலீஸ் அணிக்கு ரூ.20,000 பரிசளிக்கப்பட்டது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் செயல் தலைவா் ஆா். அா்ஜுன் துரை தலைமை வகித்தாா். எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜே.மேகநாத ரெட்டி பரிசளித்தாா். டாக்டா் அஜித் போஸ், டாக்டா் தேவ் ஆனந்த், ஷீபா அஜித்போஸ் முன்னிலை வகித்தனா். போட்டி நிா்வாகிகள் பி. ஜெகதீசன், ஏ. தினகரன், சி. ஸ்ரீகேசவன் கலந்து கொண்டனா். வியாழக்கிழமை ஆடவா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னை ஜிஎஸ்டி, ஐஓபி அணிகள் மோதுகின்றன.
தொடர்புடையது

செய்திகள் சில வரிகளில்...

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

மாநில வாலிபால்: டாக்டா் சிவந்தி கிளப் சாம்பியன்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


