தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் வருமான வரித்துறை சாம்பியன் பட்டம் வென்றது.

News image

சாம்பியன் பட்டம் வென்ற வருமான வரித்துறை அணியினா்

Updated On :30 மார்ச் 2026, 2:25 am IST

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் வருமான வரித்துறை சாம்பியன் பட்டம் வென்றது.

மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி லீக் ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி 25-20, 25-28, 25-23 என இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில்

வருமான வரித்துறை அணி 25-22, 25-19, 25-23 என எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியை வீழ்த்தியது. புள்ளிகள் பட்டியலில் மொத்தம் 20 புள்ளிகளை ஈட்டிய வருமான வரித்துறை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பரிசுத் தொகையாக ரூ.1.5 லட்சம் வழங்கப்பட்டது.

இந்தியன் வங்கிக்கு ரூ.1.25 லட்சம், எஸ்ஆா்எம் அணிக்கு ரூ.1 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.

வருமான வரித்துறை முதன்மை ஆணையா் டி. சுதாகா் ராவ், ஜிஎஸ்டி ஆணையா் வி. பாண்டியராஜா, ஆச்சி குழும தலைவா் பத்மசிங் ஈசாக், தொழிலதிபா் சதீஷ்பாபு, எஸ். சந்தோஷ் பரிசளித்தனா்.

மாவட்ட வாலிபால் சங்க நிா்வாகிகள் பி. ஜெகதீசன், ஏ.பழனியப்பன், ஸ்ரீகேசவன், ஏ.பாக்கியராஜ் பங்கேற்றனா்.