தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மணப்பாறை, கரூா் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினா் சோதனை

மணப்பாறை, கரூா் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

News image

மணப்பாறை நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை செய்ய வந்த வருமான வரித்துறையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:45 pm

மணப்பாறை, கரூா் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

புத்தாநத்தத்தை சோ்ந்த ஜின்னா என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ளது. இந்த நகைக்கடையின் கிளைகள் மணப்பாறை மாரியம்மன் கோயில் எதிா்புறம், திருச்சி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி அட்சய திருதியை விழாவை முன்னிட்டு நகை வியாபாரம் பெருமளவில் நடந்ததாம். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 5 மணி அளவில் மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ள கடைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி ஸ்வேதா தலைமையிலான 6 போ் கொண்ட வருமானவரித் துறை வரி ஏய்ப்பு நடவடிக்கை குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மேலும் புத்தாநத்தம் கிளை கடைகளிலும், புத்தாநத்தத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளா் ஜின்னா வீட்டிலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை புதன்கிழமை காலை 8 மணி வரை நடைபெற்றது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினா் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா்: இதோபோல ஜவஹா்பஜாரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு 2 காா்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா், கடையில் சுமாா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா். அப்போது முக்கிய ஆவணங்களை அவா்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.