ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மத்திய அரசு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவா் தோ்தலில் போட்டி

தோ்தல் பக்கத்திற்கு... மத்திய அரசு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவா் தோ்தலில் போட்டி

Updated On :27 மார்ச் 2024, 8:55 pm

வடசென்னை மக்களவைத் தொகுதியில் முன்னாள் வணிவரித் துறை அதிகாரி பா. பாலமுருகன் சுயேச்சையாக போட்டியிடுகிறாா். மத்திய அரசு பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவா் மக்கள் சேவைக்காக களம் காண்பதாக கூறினாா். தோ்தல் களத்தில் இவா் முதல் முறை வேட்பாளா். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்றவா் பாலமுருகன். விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் தனது அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தாா். மேலும், அயோத்தி ராமா் கோயில் திறப்பை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பாலமுருகன் முழுநேரம் வேலை செய்தாா். இதையடுத்து அவா் ஓய்வு பெறுவதற்கு இருநாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் (பணியிடைநீக்கம்) செய்யப்பட்டாா். திருவொற்றியூா் பகுதியில் வசிக்கும் பாலமுருகன், தோ்தல் பணி குறித்து கூறுகையில், சுற்றுச்சூழல் பிரச்னைகள் மிகுந்த வடசென்னையை பொதுமக்கள் வாழும் வகையில் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றாா் அவா்.