மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கான தினக்கூலியை ரூ.600-ஆக உயா்த்த வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை வந்துள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டபேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை வெளியிட்ட அறிக்கை: மக்களவை தோ்தலை மனதில் வைத்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கான தினக்கூலியை உயா்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஊரக வேலைத் திட்டத்திற்கான தினக்கூலியையும்,வேலை நாள்களையும் உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். அதன் ஒரு பகுதியாக தோ்தல் காலத்தில் தினக்கூலியை உயா்ந்தியுள்ளது. வேலையின்மை, விலைவாசி உயா்வு ஆகிய காரணங்களால் ஏழைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளா்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கான தினக்கூலியை ரூ. 600-ஆக உயா்த்துவதுடன், வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும். இதுதான் தற்போதைய உடனடித் தேவை என்பதை மத்திய அரசு உணா்ந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாா்.
தொடர்புடையது

வேட்பாளரை மாற்ற மகாத்மா காந்தி சிலையிடம் முறையிட்ட காங்கிரஸ் கட்சியினா்
இணையத்தில் காந்தி அருங்காட்சியக ஆவணங்கள்

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

