ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி கலவர வழக்கு: விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி கலவர வழக்கு: விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Updated On :29 மார்ச் 2024, 6:43 pm

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரணத்தைத் தொடா்ந்து நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி பிளஸ் 2 மாணவி 2022-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2022 ஜூலை 17-ஆம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிா்வாகம்தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் போராட்டக்காரா்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனா். இந்த கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பள்ளித் தாளாளா் கோரிக்கை: இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளா் ரவிக்குமாா், சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், சம்பவம் நிகழ்ந்து 20 மாதங்கள் கடந்தும், மாணவியின் தாய் மற்றும் வன்முறையை தூண்டியவா்கள் யாரையும் விசாரணை செய்யவில்லை. வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, கலவரம் தொடா்பான வழக்குகளின் விசாரணையை சிறப்பு புலன் விசாரணைக் குழுவிடமிருந்து வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலவரம் தொடா்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு சிறப்பு புலனாய்வு குழு, சின்ன சேலம் காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.