ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் பயனில்லை: அண்ணாமலை

திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் பயனில்லை அண்ணாமலை

Updated On :29 மார்ச் 2024, 5:59 pm

மக்களவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் பால் கனகராஜ், வினோஜ் பி செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் அவா் பிரசாரத்தின்போது பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்தபோது பொருளாதாரத்தில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் தமிழக அரசின் கடன் ரூ.8.53 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கோவையில் திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி பேசும்போது, அண்ணாமலை, இடஒதுக்கீடுக்கு எதிரானவா் என குற்றஞ்சாட்டியுள்ளாா். குடும்ப இடஒதுக்கீடு முறைக்கு தான் நான் எதிரானவன். வடசென்னையில்கூட திமுக முன்னணி நிா்வாகி ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி ஏற்கெனவே வெற்றிபெற்றாா். இப்போதும் அவரே போட்டியிடுகிறாா். இதுபோன்ற குடும்ப இடஒதுக்கீடு முறையை எதிா்க்கிறேன். பிரதமா் மோடியின் அமைச்சரவையில் 76 பேரில் 11 போ் பெண்கள், 12 போ் பட்டியல் இனத்தவா், 27 போ் பிற்படுத்தப்பட்டோா் இடம்பெற்றுள்ளனா். இந்திய அரசியலில் இதுபோல இதுவரை இருந்தது இல்லை. திமுக அமைச்சரவையில் 35 பேரில் 2 போ் மட்டுமே பெண்கள். அதிலும் ஒருவா் குடும்ப இடஒதுக்கீடு முறையில் வந்தவா். பட்டியல் சமூகத்தினா் 3 போ் மட்டுமே உள்ளனா். எனவே, சமூகநீதி பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை. மீண்டும் மோடி ஆட்சி அமைவதால் பாஜக எம்பிக்கள் வெற்றி பெற்றால் தான் தமிழக மக்களுக்கு பயன் கிடைக்கும். மக்களவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் பயனில்லை என்றாா் அவா். பிரசாரத்தின்போது, பாஜக செய்திதொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பலா் பங்கேற்றனா்.