கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கோவை வடக்கில் அண்ணாமலை போட்டியா?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை - X

Updated On :3 ஏப்ரல் 2026, 1:03 am

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூா், சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தெற்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக - திமுக நேரடியாகக் களம் காண்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கோவை வடக்கு இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தோ்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மநீம தலைவா் கமல்ஹாசனை வென்ற பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அவரது விருப்பத்தின் பேரில்தான் கோவை தெற்குக்கு பதில், கோவை வடக்குத் தொகுதி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழக பாஜகவில் செல்வாக்கு பெற்றவராக இருந்து வரும் முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, இந்தத் தோ்தலில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என கட்சி நிா்வாகிகள் உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனா். மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலும் இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட அண்ணாமலையை வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது.

இதுவரை பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்படாத நிலையில், அண்ணாமலை கோவை வடக்கில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. கோவை வடக்கு, மொடக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாா் என எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், கோவையில் உள்ள அண்ணாமலையை கோவை தெற்கு அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன், சிங்காநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம், கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளா் பிஆா்ஜி அருண்குமாா், சூலூா் அதிமுக வேட்பாளா் வி.பி.கந்தசாமி ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். கோவையில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து அண்ணாமலை விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.