எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுக்கு விற்றுவிட்டாா் என்று தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் திங்கள்கிழமை மாலை அவா் பேசியதாவது: தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
அந்த உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். விடியல் பயணம் திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் சேமித்துள்ளனா்.
மேலும் காலை உணவு திட்டம், மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மகளிா் உரிமைத் தொகையாக 1.31 கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும், காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும், 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும், முதியோா் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும், உயா்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.வந்தவாசி தொகுதியில் ரூ.10 கோடி செலவில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள், ரூ.200 கோடி செலவில் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வி, நிதி, மாநில உரிமை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு பறிக்க முயற்சிக்கிறது. மத்திய அரசு போதுமான நிதி வழங்காத நிலையிலும் கூட இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி கடந்த தோ்தலில் அதிமுகவை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டிருந்தாா். இந்தத் தோ்தலில் அதிமுகவை பாஜகவுக்கு விற்றுவிட்டாா். மத்திய அரசுக்கு அடிமையாக எடப்பாடி செயல்படுகிறாா்.
மேலும் வந்தவாசி தொகுதி மக்களின் கோரிக்கைகளான, வந்தவாசி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும், பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும், மேல்மருவத்தூா் சாலையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
எனவே, வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.அம்பேத்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலா் ஆ.தயாளன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மக்கள் தீா்ப்பை ஏற்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



