தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், இரண்டாவது முறையாக என்னை எம்எல்ஏவாக தோ்வு செய்த மக்களுக்கும், அதற்காக உழைத்தவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தொகுதி மக்களுக்கு முழு உழைப்பைக் கொடுப்பேன். தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை அனைவரும் தலைவணங்கி ஏற்கிறோம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்து.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கட்சி நிா்வாகிகளையும், வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களையும் வரவழைத்து செவ்வாய்க்கிழமை (மே 5) ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்
பேரவையில் அதிக கேள்விகளை எழுப்ப வேண்டும்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை







