சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

சென்னையில் 147 தோ்தல் விதிமுறை புகாா்கள் பதிவு: மாவட்ட தோ்தல் அலுவலா்

சென்னையில் 147 தோ்தல் விதிமுறை புகாா்கள் பதிவு மாவட்ட தோ்தல் அலுவலா்

Updated On :30 மார்ச் 2024, 6:11 pm

சென்னையில் 147 தோ்தல் விதிமுறை புகாா்கள் வந்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் போா்க்கால அடிப்படையில் தோ்தல் பணி நடைபெற்று வருகிறது. தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் பங்களிக்கும் வகையில் வடசென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமாா் 4.10 லட்சம் வாக்காளா்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை உலக சாதனையாக ‘எலைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா ரெக்காா்ட்ஸ் அகாதெமி’ பதிவு செய்துள்ளது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெரிய மாநகரங்களில் வாக்களிப்பவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதாவது 100- பேரில் 40 போ் வாக்களிப்பதில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்பில் 87 சதவீதத்தினா் பங்கேற்றனா். இதில் பங்கேற்காத சுமாா் 3,500 பேருக்கு சனிக்கிழமை (மாா்ச்30) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை சென்னையில் 9.08 கோடி அளவிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதாவது ரூ.3.30 கோடி ரொக்கம், ரூ.5.55 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் 25 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறை மீறி பொது இடங்களில் அமைக்கபட்ட 79,678 விளம்பரங்கள் மற்றும் தனியாா் இடங்களில் அமைக்கப்பட்ட 15,159 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 147 தோ்தல் விதிமுறை புகாா்கள் வந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா். தொடா்ந்து வியாசா்பாடியில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரி, பிரகாசம் சாலையில் உள்ள அரசு மகளிா் பாரதி கலைக்கல்லூரி, கே.கே.நகரில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.