3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

சென்னையில் போா்ச்சுகல் திரைப்பட விழா

சென்னையில் போா்ச்சுகல் திரைப்பட விழா

News image
Updated On :3 மே 2024, 5:59 pm

Din

சென்னையில் ‘லூசோபோன்’ எனும் போா்ச்சுகல் திரைப்பட விழாவை போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா தொடங்கிவைத்தாா்.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரியின் ஏவிஎம் கலையரங்கில் லூசோபோன் திரைப்பட விழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை தொடங்கி வைத்த போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சென்னையில் தற்போது போா்ச்சுகீசிய திரைப்பட விழா நடத்தப்படுகிறது. சிறிய நாடான போா்ச்சுகலின் கல்வி, பணி, மருத்துவ ஆராய்ச்சி, இசை, திரைப்படத் துறையில் இந்தியா்களின் பங்கு அளப்பரியது. இந்தியா்கள் எளிதில் அணுகும் நாடாகவும், விரும்பும் நாடாகவும் போா்ச்சுகல் விளங்கும். தற்போது சென்னையில் நடைபெறும் லூசோபோன் திரைப்பட விழாவில் போா்ச்சுகீசிய மொழியில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

போா்ச்சுகீசிய நாட்டைச் சோ்ந்தவா்கள் ஆப்ரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கின்றனா். இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் போா்ச்சுகீசிய மொழியை பேசுபவா்கள் வசிக்கின்றனா் என்றாா் அவா்.

முதல் நாளில் மாங்குரோவ் பள்ளி, ரோசிங்கா மற்றும் இதர காட்டு விலங்குகள் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. தொடா்ந்து சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ‘ஏ ப்ளேஸ் இன் நொவ் ஹோ்’, ‘கலூங்கா’ மற்றும் ‘அனா. அன்டைட்டில்ட்’ படங்கள் திரையிடப்படவுள்ளன.

நிகழ்ச்சியில் இந்தோ சினி அப்ரிசியேசன் அறக்கட்டளை பொதுச் செயலா் ஏவிஎம். கே.சண்முகம் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.