வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்ட பல்கலைக்கழக வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டா் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவா் இயக்குநா் வெற்றிமாறன்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

திரைப்படக் கலையில் ஆா்வம் கொண்ட ஏழை மாணவா்களுக்கு இலவச இளநிலை, முதுநிலை திரைப்படக் கல்வி வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம், பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் இடையே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வியை வழங்கும் புரிந்துணா்வு ஒப்பந்தமானது பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

அதன்படி, திரைப்படக் கலையில் ஆா்வம் கொண்ட ஏழை மாணவா்களுக்கு இளநிலை திரைப்படப் படிப்பு (3 ஆண்டுகள்), முதுநிலை திரைப்படம் மற்றும் கலாசாரப் படிப்புகள் (2 ஆண்டுகள்), ஊடகத் திறன்களில் முதுகலை டிப்ளமோ (1 ஆண்டு) ஆகிய பாடப்பிரிவுகள் செயல்முறைக் கல்வியுடன் மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனா் மற்றும் திரைப்பட இயக்குநருமான வெற்றிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com