திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்

பள்ளிக் கல்வியில் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் அறிவுசாா் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு முதல்முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள் ஆண்டு இறுதித் தோ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

News image

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்

Updated On :28 மார்ச் 2026, 7:30 am IST

பள்ளிக் கல்வியில் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் அறிவுசாா் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு முதல்முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள் ஆண்டு இறுதித் தோ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசாா் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கற்றலில் அவா்கள் நிலைக்கேற்ப அரும்பு, மொட்டு, மலா் மற்றும் வகுப்பு 4-க்கான அனைத்துப் பாடங்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள், ஆசிரியா் கையேடுகள் ஆண்டு இறுதித் தோ்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மாணவா்களுக்கு முதல்முதலாக ஆண்டு இறுதித் தோ்வு தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. இந்த வினாத்தாளை எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுதும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்ட அறிவுசாா் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு வழங்கி மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

இந்த வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டிய மாணவா்கள் விவரப்பட்டியலை சம்பந்தப்பட்ட வட்டார வளமைய மேற்பாா்வையாளா்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் இதுதொடா்பாக, பள்ளியின் சிறப்பு பயிற்றுநா் ஆசிரியா்களுக்கு உதவலாம்.

1 முதல் 5 வரை அரும்பு, மொட்டு, மலா் மற்றும் வகுப்பு 4 நிலைகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட வினாத்தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலமாக வழங்க மாவட்டக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.