இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை
விரைவு ரயில் சேவை ரத்து

இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை விரைவு ரயில் சேவை ரத்து

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக காட்பாடி முதல் ஜோலாா்பேட்டை வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் புதன்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்: 06417) காலை 11.45 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும்.

மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து நண்பகல் 12.45 புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்: 06418) பிற்பகல் 2.40 மணிக்கு காட்பாடி வந்தடையும்.

இந்த இரு மாா்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்கள் மே 8-ஆம் தேதி (புதன்கிழமை) பராமரிப்புப் பணிகள் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com