இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஜாமீனில் வந்தவா்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்குரைஞா் கடிதம்

ஜாமீனில் வந்தவா்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஜிபிக்கு அரசு தலைமை வழக்குரைஞா் கடிதம்

News image
Updated On :11 மே 2024, 12:03 am

Din

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால், அவா்களின் ஜாமீனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீஸாருக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவா்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்குரைஞரை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றங்கள் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுபவா்களின் ஜாமீனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தைப் பாதிக்கும் கடுமையான குற்றங்களில், உரிய காலக் கெடுவுக்குள் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறுவதால் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற வழி வகைச் செய்கிறது. அதைத் தடுக்க கடுமையான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, புலன் விசாரணை செய்து உரிய கால அவகாசத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன், வழக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும், ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளைக் கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், காவல் துறை அரசு குற்றவியல் வழக்குரைஞரை கலந்தாலோசித்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் தொடா் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.