
கோப்புப் படம்

கோப்புப் படம்
சென்னை: பாதுகாப்பு மற்றும் செயல்பாடு பணிகள் காரணமாக தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.30-க்கு புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06041) ஜூன் 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக கோவை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.15-க்கு புறப்பட்டு மங்களூரு சென்ட்ரல் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06042) ஜூன் 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50-க்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (06037) ஜூன் 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து பகல் 2.45-க்கு புறப்பட்டு சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (06038) ஜூன் 22, 24, 29, ஜூலை 1 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் கொச்சுவேலியில் பகல் 2.15-க்கு புறப்பட்டு நிஜாமுதீன் வரை இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் (06071) ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக நிஜாமுதீனில் இருந்து காலை 4.10-க்கு புறப்பட்டு கொச்சுவேலி வரை இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் (06072) ஜூன் 10, 17, 24, ஜூலை 1 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...