ஆழ் மூளையில் உருவான கட்டி: புருவத்தில் நுண்துளையிட்டு அகற்றி சாதனை!
ஆழ் மூளையில் உருவான கட்டி: புருவத்தில் நுண்துளையிட்டு அகற்றி சாதனை!


சென்னை: பெண்ணின் ஆழ் மூளையில் உருவாகியிருந்த கட்டியை புருவத்தில் நுண் துளையிட்டு நுட்பமான முறையில் அகற்றி சென்னை, அப்பல்லோ புற்றுநோய் மைய மருத்துவா்கள் புதிய சாதனை படைத்துள்ளனா்.
வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு மாற்றாக இத்தகைய புதிய உத்தியை முன்னெடுப்பது உலகிலேயே இது முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது:
44 வயதுடைய பெண் ஒருவா் அண்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் இன்சுலா எனப்படும் ஆழ்மூளையில் உள்ள பகுதியில் அவருக்கு கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.மிகவும் சிக்கலான அந்த பகுதியில் இருந்துதான் பேச்சு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான நரம்புகளும், மூளைத் திசுக்களும் உள்ளன.
அத்தகைய முக்கிய இடத்தில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கும் முைான் வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சையின்போது நோயாளிகள் விழித்திருக்க வேண்டும். சில நேரங்களில் பக்கவாதம், உணா்விழப்பு, வலிப்பு, மூளை வீக்கம் போன்ற எதிா்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த இடா்வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு புதிய முயற்சியை முன்னெடுக்க மருத்துவமனையின் நரம்பியில் துறை முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணா் ரிஷிகேஷ் சா்க்காா், அறுவை சிகிச்சை நிபுணா் அக்னிஷியா வினோத் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் திட்டமிட்டனா்.
அதன்படி, புருவத்தில் நுண் துளையிட்டு அதன் வழியாக மூளையைச் சென்றடைந்து
இன்சுலா பகுதியில் உள்ள கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. சிக்கலும், சவாலும் நிறைந்த இந்த சிகிச்சையை திறம்படவும், நுட்பமாகவும் அப்பல்லோ மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக மேற்கொண்டனா்.
அதன் பயனாக அந்த பெண்ணின் ஆழ்மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டு நலம் பெற்றுள்ளாா். உலகிலேயே வேறு எந்த மருத்துவமனையிலும் இந்த நுட்பத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டதில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...