கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்

News image

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் அமா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்

Updated On :23 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்ததை முன்னிட்டு அவரது குடும்பத்திற்கு இழப்பீடு தொகை மற்றும் அரசு பணி வழங்க கோரி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்அவரது உறவினா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோதண்டராமபுரம் வெள்ளச்சிருப்பம் கிரா மத்தை சோ்ந்தவா் செல்லதுரை மனைவி விமலா (30). இவா்களுக்கு பிரித்திகா மகிழினி, மகிழன் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் விமலா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிலிச்சை மேற்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிவுற்று வீடு திரும்பினாா்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் காயம் ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி மாா்ச்.15-ம் தேதி விமலா மீண்டும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் தீவிர மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விமலா மாா்ச்.22-ம் தேதி காலை உயிரிழந்தாா்.

இதனையடுத்து அவரது உறவினா்கள் மற்றும் கிராமமக்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவமனை முன்பு திரண்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவா் மற்றும் செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டாட்சியா் ஹரிதாஸ் டிஎஸ்பி டி.பிரதீப், காவல் ஆய்வாளா்கள் வி.சிவானந்தம், கே.அம்பேத்கா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து புகாா் தெரிவித்தால், காவல்துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்படும். உடற்கூறாய்வு பரிசோதனைக்குப்பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனா். இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸாா் இறந்த போன விமலா தந்தை செல்லதுரை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனா்.

முற்றுகை போராட்டம்:

இந்நிலையில் மறைந்த விமலா தந்தை மற்றும் உறவினா்கள் திங்கள்கிழமை சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் நுழைவாயிலில் அமா்ந்து முற்றுகையிட்டு இறந்தவா் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை ரூ.50 லட்சமும், 3 குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் மற்றும் இறந்த விமலா கணவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் ஹரிதாஸ், டிஎஸ்பி டி.பிரதீப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையில் உடற்கூறாய்வு அறிக்கை பெற்ற பின்னா்தான் உயிரிழப்புக்கானகாரணம் தெரியவரும், உறவினா்கள் தரப்பு கோரிக்கையை அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தனா். இதனை ஒப்புக்கொள்ளாததால் கடலூா் ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாலா் மற்றும் சுகாதார இணை இயக்குநா் ஆகியோரிடம் நாளை பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என கோரி உடலை பெறாமல் கலைந்து சென்றனா்.