குவைத்தில் கைதான தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
குவைத்தில் கைதான தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்


சென்னை: குவைத்தில் கைதான தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: குவைத் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவா்கள் 4 பேரை விடுவிக்க உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப். 9-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த மீனவா்கள் அண்டை நாடுகளைச் சோ்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனா். மாநிலத்திலுள்ள மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும் விரைவான, தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.
குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்த போதிலும் இதுவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நான்கு மீனவா்களை மீட்பது தொடா்பான செய்திகள் பத்திரிகைகளில் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இந்தச் செய்திகளைத் தொடா்ந்து, 4 தமிழக மீனவா்களின் விடுதலையை வலியுறுத்தி மத்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...