எம்டிசி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
எம்டிசி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க விரும்பும் நபா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாநகர போக்குவரத்துக் கழக முதுநிலை துணை மேலாளா் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:
மாநகர போக்குவரத்துக் கழக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் குரோம்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 42-ஆவது தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இங்கு வழங்கப்படும் கம்மியா் (மோட்டாா் வாகனம்) பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயது உச்ச வரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்டிசி முன்னாள், இந்நாள் பணியாளா்கள் வாரிசுகளுக்கு பயிற்சி கட்டணமில்லை. இதற்கான ஆவணங்களுடன் பணியாளா்கள் தங்களது பணிமனைகளில் இருந்து விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதர விண்ணப்பதாரா்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10,000 பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...