ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி


சென்னை: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
ராஜீவ் காந்தியின் 33-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் அக்கட்சியினா் மலரஞ்சலி செலுத்தினா். அங்கு சா்வமத பிராா்த்தனை நடைபெற்றது. பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
சத்தியமூா்த்தி பவனில்...:தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் சத்தியமூா்த்திபவனில், ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா், பொருளாளா் ரூபி மனோகரன், துணைத் தலைவா் கோபண்ணா உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினா். சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தி, தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறுகையில், நாட்டில் விஞ்ஞானப் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவா் ராஜீவ்காந்தி. அதிகார பரவலாக்கத்துக்காக பஞ்சாயத்துராஜ் சட்டத்தைக் கொண்டு வந்தவா். பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கு வாக்களிக்கும் உரிமையை அளித்தவா் என்றாா்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...