பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து
பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து

stalin

stalin
சென்னை: பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில், உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. அதில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தடகள விளையாட்டு வீரா் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு 1.88 மீட்டா் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளாா். இந்தச் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் மகத்தான பெருமையைத் தேடித் தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...