/

ஐஏஎஸ் அதிகாரி பீலா வீட்டில் அத்துமீறல்: ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு

சிட்டிக்கு... ஐஏஎஸ் அதிகாரி பீலா வீட்டில் அத்துமீறல்: ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :21 மே 2024, 9:38 pm

Din

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி பீலாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

ராஜேஷ் தாஸின் மனைவியும், தமிழக எரிசக்தித் துறைச் செயலருமான ஐஏஎஸ் அதிகாரி பீலா, ராஜேஷ் தாஸைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறாா். சென்னை அருகே தையூரில் பீலாவுக்கு பங்களாவுடன் கூடிய பண்ணை உள்ளது. அந்த வீட்டில் பணியாளா்களும், காவலாளிகளும் மட்டும் தற்போது உள்ளனா். பீலா சென்னையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா்.

இந்நிலையில், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா ஒரு புகாா் அளித்தாா். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18-ஆம் தேதி தன் நண்பா்கள் சிலருடன் தையூரில் உள்ள வீட்டில் காவலாளியை கீழே தள்ளிவிட்டு அத்துமீறி நுழைந்ததாகவும், காவலாளியின் கைப்பேசியைப் பறித்து மிரட்டியதாகவும் கூறியுள்ளாா்.

அதன் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீஸாா் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.