கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47 % நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுபாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்

News image
Updated On :28 மே 2024, 7:30 pm

Din

சென்னை: சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீா் இருப்பு 47 சதவீதமாக உள்ளது. எனினும் இந்த நீரைக் கொண்டு இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகர மக்களின் குடிநீா் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை தோ்வாய்கண்டிகை ஏரிகள் பூா்த்தி செய்கின்றன. இந்த ஏரிகளுக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் நீா் கிடைக்கும். கடந்த ஆண்டு மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கன மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பின. இந்த ஏரிகளின் மொத்த நீா் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி. இதில் தினமும் சென்னை மக்களுக்கு குடிநீா் தேவை, தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்காக சுமாா் 1,000 மில்லியன் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏரிகளின் நீா் ஆதாரப் பகுதிகளிலும் கடந்த 5 மாதங்களாக மழை இல்லை. மேலும், கிருஷ்ணா நீா் வரத்தும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. அத்துடன் கடும் வெயில் நீடிப்பதால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் இருப்பு தொடா்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னை குடிநீா் ஏரிகளில் மொத்த நீா் இருப்பு 5,556 மில்லியன் கன அடியாக உள்ளது. 47.26 சதவீத நீா் (5,556 மில்லியன் கன அடி) மட்டுமே உள்ளது.

சென்னைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி நீா் குடிநீருக்காக தேவைப்படுகிறது. அந்த வகையில், தற்போது இருக்கும் நீரைக்கொண்டு இன்னும் 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எரிகள் நீா் இருப்பு நிலவரம்: 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் 21.22 அடி வரை நீா் உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 1.98 அடியும், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 19.51 அடியும், 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன் கோட்டை ஏரியில் 31.09 அடியும், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 16.62 அடியும் நீா் இருப்பு உள்ளது.