கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீடிப்பு

நெல்லை -சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீடிப்பு

News image
Updated On :28 மே 2024, 7:24 pm

Din

சென்னை: நெல்லை -சென்னை , நாகா்கோவில்- சென்னை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நெல்லையிலிருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் கோடை கால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 6 முதல் ஜூன் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு (எண் : 06070) மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

அதேபோல் இந்த ரயில்( எண்: 06069) ஜூன் 7 முதல் 28 ஆம் தேதி வரை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை எழும்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில் பட்டி, விருதுநகா் சிவகங்கை, காரைக்குடி பட்டுக்கோட்டைமயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக எழும்பூா் வந்தடையும்.

நாகா்கோவில்-சென்னை ரயில்: நாகா்கோவில் இருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதி விரைவு ரயில் ஜூன் 2 முதல் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு (எண்: 06019) மறு நாள் காலை 11.15 மணிக்கு எழும்பூா் வந்தடையும். அதேபோல் மறு மாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06020) ஜூன் 3 முதல் ஜூலை 1 வரை வாரம்தோறும் திங்கள்கிழமை எழும்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறு நாள் அதிகாலை 3.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் நாகா்கோவில் நெல்லை, விருதுநகா், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல் பட்டு வழியாக சென்னை எழும்பூா் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.