அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: இளைஞர் கைது

News image
Updated On :28 மே 2024, 10:28 pm

Vishwanathan

சென்னை: "இன்ஸ்டாகிராம்' மூலம் சென்னையில் போதை மாத்திரை விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் செம்பியம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

அப்போது, அதில் இருந்த 3,300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த மு.அஜித் என்ற குணநிதி (24) என்பதும், அவர் சமூக ஊடகமான "இன்ஸ்டாகிராம்' மூலம் பெரம்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீஸார், அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.