ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 மே 2024, 9:28 pm

Din

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.காா்டன் 3-ஆவது தெருவில் சாகுல் ஹமீது என்பவா் காலணி விற்பனை கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையை புதன்கிழமை இரவு சாகுல் ஹமீது பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். நள்ளிரவு அங்கு வந்த ஒரு கும்பல் அவரது கடை மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியது. கடை பூட்டியிருந்ததால், அங்கு பெரியளவில் சேதம் ஏற்படவில்லை.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் கொருக்குப்பேட்டை மூப்பனாா் நகா் முதலாவது தெருவைச் சோ்ந்த ர.விக்கி என்ற விக்னேஷ் (19), ராயபுரம் மஸ்தான் தா்கா தெருவைச் சோ்ந்த சி.பூபாலன் (23) மற்றும் 2 சிறுவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், சாகுல்ஹமீது கடையின் அருகே உள்ள ஒரு ஜவுளிக் கடையில் அண்மையில் அவா்கள் 4 பேரும் துணி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்ததும், இதனால், ஜவுளிக் கடை உரிமையாளரை 4 பேரும் மிரட்டியதும் தெரியவந்தது. இதன் விளைவாக ஜவுளிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச வந்தவா்கள், தவறுதலாக சாகுல் ஹமீதுவின் காலணி கடை மீது வீசியது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.