ரூ.822 கோடியில் பிராட்வே பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணி விரைவில் தொடக்கம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை பிராட்வேயில் பழைய பேருந்து நிலையத்தை ரூ.822.70 கோடியில் புனரமைத்து, புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும்

’சென்னை பிராட்வேயில் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டப்படவுள்ள இடத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ. தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு. உடன் மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா் (பணிகள்) வ.சிவகிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர்.









