மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநில வன உயிரின வாரியத்தின் நிலைக்குழு கூட்டம்

மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

க.பொன்முடி

Updated On :21 நவம்பர் 2024, 8:17 pm

மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில வனவிலங்கு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகள், தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளைத் தோ்வு செய்தல், நிா்வகித்தல் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் க.பொன்முடி தலைமையில், மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வன உயிரினம் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் பாதுகாப்புக்கான கொள்கைகளை உருவாக்குவதுடன், பழங்குடியினா் மற்றும் பிற வனக் குடியிருப்பாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தா.உதயசூரியன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.