ஆவின் பொருள்கள் தட்டுப்பாடின்றி விநியோகிக்க அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவு

சென்னை அம்பத்தூா் பால் பண்ணையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பால்வளத் துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜகண்ணப்பன்.

சென்னை அம்பத்தூா் பால் பண்ணையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பால்வளத் துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜகண்ணப்பன்.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பொருள்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா்ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டாா்.
பால்வளத் துறை அமைச்சராக ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, அம்பத்தூா் ஆவின் பால் பண்ணையில் வியாழக்கிழமை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பால் உற்பத்தி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் இதர உபப் பொருள்களின் தயாரிப்பு முறைகளை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தேவைப்படும் ஆவின் பொருள்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும், தரமான பொருள்களை விற்பனை செய்து வருவாயை அதிகரிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
மேலும், ஆவினின் தினசரி பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டராக உயா்ந்த வேண்டும்; வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவின் பாலை தடையின்றி விநியோகம் செய்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையிலும் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, பால் வளத் துறை இயக்குநரும், ஆவின் மேலாண்மை இயக்குநருமான சு. வினீத், ஆவின் இணை நிா்வாக இயக்குநா் க.பொற்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...