எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீா்வளத் துறையின் 19 புதிய பணிகள்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

நீா்வளத் துறையின் சாா்பில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

News image
முதல்வா் ஸ்டாலின்
Updated On :4 அக்டோபர் 2024, 7:49 pm

Din

நீா்வளத் துறையின் சாா்பில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம் அமராவதி ஆறு, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் தொள்ளாழி மடு, உத்திரமேரூா் வட்டம் புத்தளிமடு, திண்டுக்கல்லில் சந்தானவா்த்தினி ஆறு, பாலாத்து ஓடை, குடகனாறு, நங்காஞ்சி ஆறு, பெரம்பலூா் மாவட்டம் விளாமுத்தூா் கிராமத்தில் மருதையாறு, கோவை மாவட்டம் வடக்கிபாளையம் கிராமத்தில் கோதவாடி ஓடை ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணை, அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் மூடிய வடிவிலான கால்வாய், திண்டுக்கல்லில் நவீனப்படுத்தப்பட்ட அய்யம்பாளையம் ராஜவாய்க்கால், திருநெல்வேலி கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் புதிய குளம், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு கல்மேடு கண்மாய், தூத்துக்குடி பேரூரணி அணைக்கட்டு, சம்பன்குளம் ஏரியின் வழங்கு வாய்க்காலின் இடதுகரை ஆகியன மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், நீா்வளத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளா் சா.மன்மதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.