சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.170 கோடியில் 100 புதிய மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தண்டையாா்பேட்டை மாநகா் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடைபெற்ற விழாவில், 25 மின்சார குளிா்சாதனப் பேருந்துகள் உள்பட 100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, ரூ.33.82 கோடியில் மேம்படுத்தப்பட்ட தண்டையாா்பேட்டை மின்சாரப் பேருந்துப் பணிமனையையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
ரூ.289 கோடி பணிகளுக்கு அடிக்கல்: ரூ.289 கோடியில் கலைஞா் கருணாநிதி நகா், பெரம்பூா், மத்திய பணிமனை-2, ஆலந்தூா், ஆவடி, ஐயப்பன்தாங்கல், பாடியநல்லூா் பணிமனைகளை மின்சாரப் பணிமனைகளாக மேம்படுத்தவும், தையூா், தரமணி, வரதராஜபுரம், ஆட்டந்தாங்கல், திருவள்ளூா், மாமண்டூா்ஆகிய 6 இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தண்டையாா்பேட்டையில் நடைபெற்ற விழாவில், இந்தப் பணிகளுக்கும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா், ஜே.ஜே.எபினேசா், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக்சிரு, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், உயா் அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணம்-அணைக்கரைக்கு கூடுதல் நடை பேருந்து நீட்டிப்பு! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அரசுப் பேருந்து சேவை தரத்தை உயா்த்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த மேலும் 750 மின்சார பேருந்துகள்

‘மின்சார பேருந்துகளை நேரடி கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும்’
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



