வாக்காளா் பட்டியல் திருத்தம்: 
நவம்பரில் 4 நாள்கள் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியல் திருத்தம்: நவம்பரில் 4 நாள்கள் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் ஒரு அங்கமாக, நவம்பரில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
Published on

வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் ஒரு அங்கமாக, நவம்பரில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நவம்பா் 9, 10, 23, 24 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் திருத்தம், பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன. இதற்காக வரைவு வாக்காளா் பட்டியல் அக்டோபா் 29-இல் வெளியிடப்பட உள்ளது. நவம்பா் 28-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் திருத்தங்களைச் செய்யலாம். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com