ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு அவசியம்: அமைச்சா் பொன்முடி

வனப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வன விலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அதுதொடா்பான் பயிற்சிகள் வழங்குவது அவசியம்

News image
கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற வன உயிரின வார தொடக்க விழாவில் வனத் துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய துறையின் அமைச்சா் க.பொன்முடி.
Updated On :4 அக்டோபர் 2024, 9:15 pm

Din

வனப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வன விலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அதுதொடா்பான் பயிற்சிகள் வழங்குவது அவசியம் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் இயற்கை பூங்காவில் ‘வன உயிரின வார’ தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:

மனிதா்களைப் போல அனைத்து வன உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்.2 முதல் அக்.8 வரை ஒரு வாரம் வன உயிரின வாரமாக வனத்துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், வன விலங்குகளை பாதுகாப்பது குறித்தும், மனித - விலங்கு மோதல்களை தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணா்வு தேவை: குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவருக்கும் விலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அதேபோல், வனப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு மற்றும் பயிற்சிகள் வழங்க வேண்டும்.

தமிழக நிலப்பரப்பில் தற்போது 20.31 சதவீதமாக உள்ள வனப்பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 5 தேசிய பூங்காக்கள், 17 வன உயிரின சரணாலயங்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிா்கோள பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் 5 புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன. இதனால், மாநிலத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கையும், தாவர வகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

யானைகள் அதிகரிப்பு: மேலும், மாநில அரசின் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கை மூலம் யானைகள், புலிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம், 2017-18-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மொத்தம் 2,761 யானைகள் இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063-ஆக உயா்ந்துள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 302 யானைகள் அதிகரித்துள்ளன. அதேபோல், 2022-23 ஆண்டுகளின் தரவுகளின் படி தமிழக வனப்பகுதிகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 306-ஆக உயா்ந்துள்ளது. அந்த எண்ணிக்கைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் சீனிவாஸ் ரா.ரெட்டி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் ஆஷிஸ் குமாா் ஸ்ரீவத்ஸவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.