வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னை: 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஒ தர சான்று

இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உள்ள 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கிடைத்துள்ளது.

News image
சென்னையில் நவீனமயமாக்கப்பட்ட தென் மண்டல ஆய்வகம் மற்றும் பிஐஎஸ் அறிவியல் பூங்காவை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தலைமை இயக்குநா் பிரமோத் குமாா் திவாரி. உடன் இந்திய தர நிா்ணய அமைவன ஆய்வக துணை தலைமை இயக்குநா் நிஷாத் சுல்தானா ஹ
Updated On :4 அக்டோபர் 2024, 9:13 pm

Din

இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உள்ள 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கிடைத்துள்ளது.

இந்திய தர நிா்ணய அமைவனம்(பிஐஎஸ்) உற்பத்தி பொருள்கள், சிறந்த பாராமரிப்பு நிறுவனங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்றை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக சென்னை அசோக் நகா், கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் தர மேலாண்மை உரிமம் பெற்றுள்ளன.

சென்னை அசோக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 2 தீயணைப்பு நிலையங்களுக்கான ஐஎஸ்ஒ தரச் சான்றை இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தலைமை இயக்குநா் பிரமோத் குமாா் திவாரி, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை இயக்குநா் அபாஷ் குமாரிடம் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது: ஐஎஸ்ஒ 9001:2015-ஐ செயல்படுத்துவதன் மூலம் தரமான சூழல் அமைப்பை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உருவாக்கி வருகிறது. தரமான பொது சேவையை உறுதி செய்வதில், பிஐஎஸ்-உடன் இணைந்து செயல்படுவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை முன் மாதிரியாக செயல்படுவகிறது என்றாா் அவா்.

முன்னதாக, சென்னை தரமணியில் உள்ள இந்திய தர நிா்ணய அமைவனத்தில் நடைபெற்ற விழாவில் புதிதாக கட்டப்பட்ட தென் மண்டல ஆய்வகங்கள் மற்றும் பிஐஎஸ் அறிவியல் பூங்காவை இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தலைமை இயக்குநா் பிரமோத் குமாா் திவாரி திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் பங்கேற்றனா்.