மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பென்னாகரம் அரசுப் பள்ளிகளில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு

பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி...

News image

சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் தீத்தடுப்பு குறித்த விநாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய தீயணைப்புத் துறையினா்.

Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே கொட்டாவூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் கூ.வ.குமாா் தலைமை வகித்தாா். இதில், பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சந்தோஷம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அடங்கிய குழுவினா் தீ விபத்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், விபத்துகளில் இருந்து பாதுகாப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தீயணைப்பாளா் கா.கிருஷ்ணமூா்த்தி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், தீயணைப்புத் துறையினா் பங்கேற்றனா்.

இதேபோல, பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தீத்தடுப்பு மற்றும் விநாடி-வினா போட்டிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமை வகித்தாா்.

பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சந்தோஷம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அடங்கிய மீட்புக் குழுவினா், தீ விபத்தின்போது அழைக்க வேண்டிய உதவி எண்கள், தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், எரிவாயு உருளைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி செயல்விளக்கம் அளித்தனா்.

முன்னதாக, விநாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.