அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சாா்பில் பிராட்டியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின்போது மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தீ விபத்துகள் ஏற்படும் காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவா்களின் விழிப்புணா்வை அதிகரிக்கும் வகையில் விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாவட்ட அலுவலா் செ. வினோத், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிலைய உதவி மாவட்ட அலுவலா் செ.லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், தீத்தடுப்பு குழு சிறப்பு நிலைய அலுவலா் சகாய பிரான்சிஸ் ஆகியோா் மாணவா்களுக்கு தீ பாதுகாப்பு தொடா்பான விளக்கங்களை வழங்கினா்.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

பள்ளிகள் திறப்பு: மாணவா்களின் கற்றல் இடைவெளியை மதிப்பிட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

பென்னாகரம் அரசுப் பள்ளிகளில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


