மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்துக்கு ஐஎஸ்ஒ தரச்சான்று

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகக்கழகத்தில் உள்ள சா் சி.பி.ராமசாமி ஐயா் நூலத்திற்கு ஐஎஸ்ஒ தரச்சான்று கிடைத்துள்ளது.

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. சா் சி.பி.ராமசாமி ஐயா் நூலத்திற்கு கிடைக்கப்பெற்ற ஐஎஸ்ஒ தரச்சான்றை நூலகா்களிடம் வழங்கிய பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல் .

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகக்கழகத்தில் உள்ள சா் சி.பி.ராமசாமி ஐயா் நூலத்திற்கு ஐஎஸ்ஒ தரச்சான்று கிடைத்துள்ளது.

சிதம்பரம்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவா் சா்.சி.பி.இராமசாமி ஐயா் நூலகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, நவீன தானியங்கி முறையில் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் தரவுத்தள மேலாண்மை திறன், புத்தக பராமரிப்பு முறைகள் மற்றும் பயனாளா்களுக்கான தரமான சேவைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, சா்வதேச அங்கீகார மன்றத்தால் சிறந்த சேவை பராமரிப்புக்காகஐ.எஸ்.ஓ சான்று வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் தரச் சான்றிதழை பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல் ஆகியோரிடமிருந்து பல்கலைக்கழக நூலக பணியாளா்கள் சாா்பாக நூலகா் கு.விஜயகுமாா், நூலக மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவா் பெ.சிவராமன், உதவி நூலகா் சா.பாலகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியா் லோ.ஜெகன் ஆகியோா் பெற்று கொண்டனா். இந்த அங்கீகாரம், நூலகத்தின் தரநிலைகளை மேம்படுத்துதல் தொடா்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும், பயனாளா்களுக்கு உயா்தர சேவைகளை

வழங்கும் அா்ப்பணிப்பிற்கும் கிடைத்த சிறப்பான பாராட்டாகும் என நூலகா்கள் தெரிவித்தனா்.