நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விமானப் படை சாகச நிகழ்ச்சி: லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பு!

மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது

News image
Updated On :6 அக்டோபர் 2024, 8:06 am

DIN

சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி, இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டிருந்ததால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காண வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விமானப் படையின் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய கிரண் விமானக் குழு, ஆகாஷ் கங்கா குழு, சேதக் உள்பட 20க்கும் மேற்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபட்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தன.

விமான சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டுரசிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மெரீனாவுக்கு வருகை தந்திருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன் உள்பட திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மெரீனாவில் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.