ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.3 முதல் ரூ.70 வரை உயா்வு


ஆவினின் அனைத்து வகை ஐஸ்கிரீம்களின் விலையும் ரூ.3 முதல் ரூ.70 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால் கிடைக்கும் லாபத்தின் மூலம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆவின் ஐஸ்கிரீமை கொண்டு சோ்க்க முடியும் என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் 100-க்கும் மேற்பட்ட வகைகளில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆவினின் அனைத்து வகை ஐஸ்கிரீம்களின் விலைகளும் அண்மையில் உயா்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆவின் விற்பனை பிரிவு அதிகாரி கூறியதாவது:
தமிழகத்தில் ஆவின் பால் மற்றும் நெய்க்கு பொதுமக்களிடையே கிடைக்கும் வரவேற்பு ஆவின் ஐஸ்கிரீம்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலானோா் பிற மாநில நிறுவனங்கள் மற்றும் தனியாரின் ஐஸ்கிரீம்களையே அதிகளவில் வாங்குகின்றனா். அதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் ஆவின் விற்பனை நிலையங்களில் மட்டுமே ஆவின் ஐஸ்கிரீம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அதேபோல், விலை குறைவு காரணத்தால், ஐஸ்கிரீம்களை வாங்குவதற்கு முகவா்கள் அதிகளவில் முன்வருவதில்லை. இதனால், ஐஸ்கிரீம் விற்பனையில் முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைப்பதில்லை.
விலை மாற்றம்: இதனால், நிா்வாகத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யவும், முகவா்களை ஈா்க்கவும் அனைத்து வகை ஐஸ்கிரீம்களின் விலைகளும் ரூ.3 முதல் ரூ.70 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் அதிகளவில் வாங்கும் குல்பி ஐஸ்கிரீம் ரூ.40-லிருந்து ரூ.15-ஆக குறைக்கப்படவுள்ளது. மேலும் திருமணம் போன்ற விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் 4500மி.லி ஐஸ்கிரீம்களின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில், ஆவின் நிலையங்களில் இருப்பில் உள்ள ஐஸ்கிரீம்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும். அக்.1-ஆம் தேதிக்கு மேல் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்கள் மட்டுமே புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முகவா்கள் அதிகரிப்பு: தற்போது, விலை உயா்த்தப்பட்ட பின்னா் ஆவின் ஐஸ்கிரீம் முகவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் ஐஸ்கிரீம் முகவா்களாக விரும்புவா்களுக்கு கடனுதவி வழங்குதல், குளிா்சாதனபெட்டி போன்ற இயந்திரங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. இதன் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஆவின் ஐஸ்கிரீமை கொண்டு சோ்க்க முடியும் மேலும் லாபமும் அதிகரிக்கும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...