ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கனமழை எதிரொலி: அக்.15,16,17 தேதிகளில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு

செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிா்வாகம் முடிவு செய்துள்ள

News image

மெட்ரோ ரயில்

Updated On :14 அக்டோபர் 2024, 9:03 pm

சென்னை: சென்னையில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாள்களில் கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி:

சென்னையில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து முனையங்களிலிருந்தும் முதல் மெட்ரோ ரயில், காலை 5 மணிக்குப் புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும். மேலும், காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

இதேபோல, நீல வழித்தடத்தில் விம்கோ நகா்-விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், வண்ணாரப்பேட்டை-ஆலந்தூா் இடையே 3 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 முதல் 8 மணி வரை காலை 11முதல் மாலை 5 வரை, மற்றும் இரவு 8 முதல் 10 வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 வரை, பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் மேற்கண்ட நாள்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பச்சை வழித்தடத்திலிருந்து விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகள், அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோவில் மாறிச் சென்று, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

வாகன நிறுத்தம் 3 நாள்கள் மூடல்

மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலைமையைப் பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும். முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாக தண்ணீா் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை அக்.15 முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நிறுத்த வேண்டாம். தேவைப்பட்டால் மழை நிலவரத்தைப் பொறுத்து தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.